பெரும்பாலும் பங்குனி மாதக் கடைசியில் வரும். சில சமயங்களில் சித்திரை முதல் வாரம் கொண்டாடுவார்கள். ஸ்ரீ ராம நவமி, பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. அன்று ராமர் புண்ணிய பாரதத்தில் உதித்த நன்னாளாகும்.
அன்று வாசலில் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். குளித்து விட்டு விளக்கேற்றி இராமர் பட்டாபிஷேகப் படத்தை, ஒரு கோலம் போட்ட பலகையின் மீது வைத்து ராமருக்குச் சந்தன குங்குமம் இட்டு, பூமாலைகள் போட்டு, பஞ்சு வஸ்த்ரம் சாத்தி, ராம நாமாவளிகளைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். (கிரமமாக செய்ய வேண்டுமென்றால், ராமர் அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம்)
ராமருக்குப் பிடித்தமான பாயசம், கோசம்பரி, நீர்மோர், பானகம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பத்து நாளும், ராமர் படத்தை வைத்து பூஜை செய்து, தினமும் ராமர் பற்றிய பாட்டுகளை ஸ்லோகங்களைச் சொல்லி இரண்டு வேளையும் ஆரத்தி எடுத்து பத்து நாள் முடிக்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களை, தெரிந்தவர்களைக் கூப்பிட்டுத் தாம்பூலம் கொடுத்து, நீர்மோர், பானகம், சுண்டல், கோசம்பரி வினியோகம் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment