தயிர் அவல்
வெறும் அவலில் ஒரு வெல்லக் கட்டி. தயிரில் கொஞ்சம் அவல் போட்டு தயிர் அவல் செய்யலாம்.
புளி அவல் , வெல்ல அவல்
காலையிலேயே அவலை, புளித் தண்ணீரிலும், வெல்ல அவலுக்கு வெல்லத் தண்ணீரிலும், நனைத்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் நன்றாக ஊறி, மாலையில் தாளிக்கும்போது, உதிரி உதிரியாக வந்து நன்றாக வரும்.
எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Tuesday, July 31, 2012
பால் பாயசம்
ஒரு பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து பாசிபருப்பை போட்டு நன்கு குழைய வெந்ததும், வெல்லம் சிறிது போட்டு கொதித்ததும், ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும். ஆறியபின் பால் விடவும்.
கோகுலாஷ்டமி
ஆவணி அவிட்டம் முடிந்த எட்டாம் நாள் கோகுலாஷ்டமி வரும். முதல்நாளே, பட்சணத்துக்குத் தேவையான மாவைத் தயார் செய்து வைத்துக் கொண்டு விடவும். அன்று மாலை கிருஷ்ணருக்குப் பிடித்தமான அவல் (புளி அவல், வெல்ல அவல்) முக்கியம்.
பட்சணங்களாக முள்ளு முறுக்கு, தேன்குழல், உப்புச் சீடை, வெல்லச் சீடை, கை முறுக்கு, அப்பம், பயத்தம்பருப்பு பாயசம், சிகிலி உருண்டை, சூப்பான், கோடுவளை, சுண்டல் எல்லாம் செய்ய வேண்டும். அன்று காலையில் ஒருவேளை மட்டுமே சாப்பிட்டுவிட்டு மாலையில் பூஜை முடிந்து தான் சாப்பிட வேண்டும்.
பால் பாயசம், அவல் https://youtu.be/DRSZcDOblIk
வீடெல்லாம் துடைத்து, வாசலிலிருந்து மாக்கோலம் போட வேண்டும். கிருஷ்ணர் பாதங்கள் வாசலிலிருந்து பூஜை ரூம் வரை போட வேண்டும். கிருஷ்ணர் பொம்மையை வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். வாசனைப் பூக்கள் வாங்கிப் போட வேண்டும். நகையெல்லாம் போட்டு, சந்தன குங்கும்ம் இட்டு, பூஜை புஸ்தகத்தில் உள்ளபடி கிருஷ்ணர் அஷ்டோத்திரம் படித்து, அர்ச்ச னை செய்து, நைவேத்தியம் எல்லாம் கொண்டு வந்து வைத்து, தேங்காய்ப் பழம் உடைத்து, வெற்றிலை பாக்கு, பால், தயிர், புளி அவல், வெல்ல அவல், பழங்கள் (நாவல் பழம்), எல்லாம் வைத்துப் பூஜையை முடிக்க வேண்டும்.
கிருஷ்ணர் மேல் பாட்டுக்கள் பாடி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் செய்ய வேண்டும். பக்கத்தில் உள்ளவர்களைக் கூப்பிட்டு, வெற்றிலை பாக்கு மஞ்சள், குங்குமம் கொடுக்கவும்.முடிந்தால், சீடை, முறுக்கு எல்லாம், முதல்நாளே எச்சில் பண்ணாமல் செய்து வைக்கலாம். கோகுலாஷ்டமி அன்று அவல், பாயசம், சுண்டல் மட்டும் செய்யலாம்.

Subscribe to:
Posts (Atom)