எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Showing posts with label ஐப்பசி. Show all posts
Showing posts with label ஐப்பசி. Show all posts
Tuesday, October 23, 2012
தீபாவளிப் பண்டிகை
தீபாவளிக்கு எல்லா பட்சணங்களும் செய்யலாம். சோமாசி, மிக்சர், முள்ளு முறுக்கு, ஓட்டு பக்கோடா, மைசூர்பாக்கு செய்யலாம். பண்டிகைக்கு முதல் நாள் சுவாமி அறையைச் சுத்தம் செய்து கோலமிட்டு, புதுத் துணிகளுக்கு மஞ்சள் துடைத்து எண்ணெய், சீயக்காய், மஞ்சள், குங்குமம், பட்சண வகைகளை வைக்க வேண்டும். நல்லெண்ணையில், பூண்டு, இஞ்சி, ஒரு மிளகாய் போட்டு காய்ச்சி ஆற விட்டு தேய்த்துக் கொள்ளலாம். தண்ணீர் காயவைக்கும் அண்டாவைத் தேய்த்து மாவிலை கட்டி அடுப்பிற்கு கோலம் போட்டு அண்டாவில் சந்திர சூரியன் படம் வரைய வேண்டும்.
விடியற்காலை எழுந்து எண்ணைய் தேய்த்துக் குளித்து விட்டு புதுத் துணிகள் அணிந்து சுவாமி நமஸ்காரம் செய்து, பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்ய வேண்டும். எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். கொஞ்ச நேரம் பட்டாசு வெடித்து விட்டு எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து பட்சண வகைகள் சாப்பிட்டுவிட்டு, சந்தோசமாக தீபாவளியைக் கொண்டாடலாம். கோயிலுக்குச் சென்று விட்டு வரலாம்.
Subscribe to:
Posts (Atom)