எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Showing posts with label சரஸ்வதி. Show all posts
Showing posts with label சரஸ்வதி. Show all posts
Tuesday, October 23, 2012
சுகியன் அல்லது சுய்யம்
தேங்காய் பூரணம் செய்து கொண்டு ஒரு டம்ளர் பச்சரிசி, அரை டம்ளர் உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சிறிது உப்பு போட வேண்டும். பூரணத்தைச் சின்னச் சின்ன உருண்டையாக செய்து மாவில் தோய்த்து எண்ணையில் உருட்டிப் போட வேண்டும். புசு புசு வென்று உப்பிக் கொண்டு வரும். சிவந்ததும் எடுத்து விடவும்.
சரஸ்வதி பூஜை
நவராத்திரி ஒன்பதாம் நாள் சரஸ்வதி பூஜை அன்று, வீடு வாசல் சுத்தம் செய்து, கோலம் போட்டு, நாம் படித்த புத்தகங்கள், பேனா, பென்சில், சுலோக புத்தகங்கள், வாத்தியங்கள், அளக்கும் படி, கத்தரிக்கோல் போன்றவற்றை, ஒரு பெட்டியின் மீது அடுக்கி, அதன்மேல் லட்சுமி, சரஸ்வதி, பொம்மையை தனியாக எடுத்து வைத்து ரவிக்கை துணி சார்த்தி, பஞ்சு வஸ்திரம் போட்டு இனிப்பு அப்பம் வார்த்து பூஜை செய்ய வேண்டும்.
மசால் வடையும், சுகியனும் செய்ய வேண்டும். சரஸ்வதி மேல் சுலோகங்கள் சொல்லி பாட்டு பாடி, தேங்காய், பழம் வெற்றிலை பாக்கு வைத்து பூஜை செய்து ஆரத்தி எடுத்து முடிக்க வேண்டும்.
Subscribe to:
Posts (Atom)