எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Showing posts with label சமையற்குறிப்பு. Show all posts

Tuesday, October 23, 2012
சுகியன் அல்லது சுய்யம்
தேங்காய் பூரணம் செய்து கொண்டு ஒரு டம்ளர் பச்சரிசி, அரை டம்ளர் உளுந்து ஊற வைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்து சிறிது உப்பு போட வேண்டும். பூரணத்தைச் சின்னச் சின்ன உருண்டையாக செய்து மாவில் தோய்த்து எண்ணையில் உருட்டிப் போட வேண்டும். புசு புசு வென்று உப்பிக் கொண்டு வரும். சிவந்ததும் எடுத்து விடவும்.
Tuesday, July 31, 2012
அவல்
தயிர் அவல்
வெறும் அவலில் ஒரு வெல்லக் கட்டி. தயிரில் கொஞ்சம் அவல் போட்டு தயிர் அவல் செய்யலாம்.
புளி அவல் , வெல்ல அவல்
காலையிலேயே அவலை, புளித் தண்ணீரிலும், வெல்ல அவலுக்கு வெல்லத் தண்ணீரிலும், நனைத்து ஊற வைக்க வேண்டும். அப்போது தான் நன்றாக ஊறி, மாலையில் தாளிக்கும்போது, உதிரி உதிரியாக வந்து நன்றாக வரும்.

பால் பாயசம்
ஒரு பாத்திரத்தில், தண்ணீரைக் கொதிக்க வைத்து பாசிபருப்பை போட்டு நன்கு குழைய வெந்ததும், வெல்லம் சிறிது போட்டு கொதித்ததும், ஏலக்காய் பொடி போட்டு இறக்கவும். ஆறியபின் பால் விடவும்.
Wednesday, April 4, 2012
மசால் வடை
பட்டாணி பருப்பு - 200
அல்லது
கடலைப்பருப்பு - 1 டம்ளர்
துவரம் பருப்பு - 1/2 டம்ளர்
உளுந்து - 1 ஸ்பூன்
பாசிபருப்பு - 1/4 டம்ளர்
(ஊற வைக்கவும்)
கடலைபருப்பும் துவரம்பருப்பையும் ஒன்றாக ஊற வைக்கவும். 1 மணி நேரம் ஊறினால் போதும். நன்றாக அலம்பி கல் இல்லாமல் வடிய விடவும். 2 ப•மிளகாய், 2 வரமிளகாய், இஞ்சி 1 துண்டு, பெருங்காயம், உப்பு, கறிவேப்பிலை போட்டு, இரண்டு பருப்பையும், லேசாக தண்ணீர் தெளித்து அரைக்கவும். கொரகொரவென்று கெட்டியாக அரைக்கவும். சுவாமிக்கு வெங்காயம் போடாமல், நான்கு தட்டி நெய்வேத்யம் செய்துவிட்டு, மீதி மாவுக்கு சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி பிசைந்து மாவுடன் பிசைந்து உருட்டி வடையாக தட்டி எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
எல்லா பண்டிகைக்கும் இந்த வடை செய்யலாம். மாலை நேர டிபனுக்கும் கொஞ்சமாக செய்து கொடுக்கலாம்.

Friday, March 23, 2012
உப்பிட்டு
உப்பிட்டு - போளி
தேவையானவை
மைதா - 1 4 கிலோ,
ரவை - கைப்பிடி
வெல்லம் - 1 2 கிலோ
கடலைப்பருப்பு - 100 கிராம்
து.பருப்பு - 50 கிராம்
முற்றிய தேங்காய் - 1 துருவிக் கொள்ளவும்
ஏலக்காய் - 1 ஸ்பூன் பொடி
காலையிலேயே ரவையைக் கொஞ்சம் தண்ணீரில் ஊற வைத்து, அரை மணி கழித்து மைதாமாவைச்சலித்து, ரவையை அதனுடன் சேர்த்து சிறிது உப்பு, தண்ணீர் விட்டு, புரோட்டா மாவு போல் இளக்கமாக பிசைந்து வைக்கவும். கொஞ்சம் கொஞ்சமாக எண்ணை விட்டு பிசையவும். இரண்டு மணி நேரம் ஊற வேண்டும்.
கடலைப்பருப்பையும் து. பருப்பையும் வேக விடவும். குழைய விடாமல், நசுக்கினால், மசியும் பதத்தில் இருக்க வேண்டும். பிறகு, வடிய விட்டு, தேங்காயை வாணலியில் போட்டு, வதக்கிய பின்னர் வெல்லம் பொடி செய்து போட்டு, ஏலக்காய் பொடி போட்டு, பூரணமாக வதக்கவும். ஆறியபின் பூரணம், கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, எல்லாவற்றையும் மிக்ஸியிலோ, அல்லது ஆட்டுரலிலோ நைசாக அரைத்து இளக்கமாக இருக்கும். வாணலியில் போட்டு வதக்கி சிறிது கெட்டியாகும் வரை சிறிது நெய் விட்டு வதக்கி எடுத்து, ஆறியபின் ஒரு எலுமிச்சம்பழ அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு, ஒரு பிளாஸ்டிக் கெட்டி கவர், அல்லது வாழை இலையில், மைதா மாவை அப்பளம் போல எண்ணெய் தொட்டு, வட்டமாக பரப்பி, அதன் நடுவில் தேங்காய் பூரண உருண்டையை வைத்து மூடி அப்பளக் குழவி அல்லது, கையால், மெலிதாக தட்ட வேண்டும்.
தோசைக்கல்லில் போட்டு பேப்ப ரை உடனே எடுத்து விடவும். இரண்டு பக்கமும் வெந்து சிவந்ததும் (நெய் எண்ணை கலந்து) ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு சப்பாத்தி போல் போட்டு எடுக்க வேண்டும். பிறகு மடித்து, ஒரு பேசினில் போடவும். இப்படியே, எல்லா மைதா மாவையும், பூரி போல் இட்டு, பூரணம் வைத்து, போளி தட்டிக் கொள்ளவும். பரிமாறும்போது, 1 ஸ்பூன் நெய் விட்டு சாப்பிட்டால், மிகவும் ருசியாக இருக்கும்.
இந்தப் போளியை, போகிப்பண்டிகை, ஆடிப்பண்டிகை, ஆவணி அவிட்டம் போன்ற பண்டிகை நாட்களிலும், சுமங்கலிப்பிரார்த்தனைக்கும் செய்வார்கள்

Sunday, March 11, 2012
கருவடாம்
ஜவ்வரிசியை வறுத்து, பொடி செய்து கொள்ளவும். ஒரு அரிசி மாவுக்கு, 4 ஜவ்வரிசி என்ற கணக்கில் அவற்றைக் கலந்து கொள்ளவும். இந்த மாவுக் கலவைக்குத் தக்க தண்ணீரைக் கொதிக்கவிட்டுக் கொள்ளவும்.
பச்சைமிளகாயை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் மாவைக் கலந்து விடவும். மெல்ல மற்ற மாவையும், பச்சைமிளகாய் விழுதையும் போட்டுக் கலக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு, குக்கரை மூடிவிடவும்.
வடாம் மாவு ரெடி.
வெங்காய வடாத்துக்கு, இத்துடன், சின்ன வெங்காயத்தை வேக வைத்துக் கலக்கவும்.

Thursday, March 8, 2012
கொழுக்கட்டை
நான்கு நாட்களுக்கு முன்னாலேயே பச்சரிசியை நனைத்து உலர்த்தி, இடித்து மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிண்ணத்தில், 1.5 டம்பளர் தண்ணீர் எடுத்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது, அரை டம்பளரை எடுத்துவிடவும். 2 spoon அரிசிமாவைக் கரைத்து, கால் ஸ்பூன் உப்பு போட்டு, கொதிக்க வைக்கவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் விடவும். கொதிக்கும் தண்ணீரைக் கீழே இறக்கி, பச்சரிசி மாவை அதில் கொட்டி, கட்டி இல்லாமல் கிளறவும். பிறகு, சிறிது நேரம், அடுப்பில் வைத்து, தட்டு போட்டு மூடி அடுப்பைச் சிம்மில் வைக்கவும். மாவு வெந்திருக்கும்.
பிறகு, தட்டில் ஈரத்துணியைப் போட்டு மாவை எடுத்துப் போட்டு, துணிபோட்டு மூடி நன்கு அழுத்தி பிசையவும். மாவு ரப்பர் பந்து போல் ஒட்டாமல் நன்கு பிசைய வரும். பிறகு ஒரு கிண்ணத்தில் எண்ணெயை வைத்துக் கொண்டு சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு கிண்ணங்கள் செய்ய வேண்டும்.
பிறகு பூரணத்தை அதில் வைத்து, கிண்ணத்தின் மேல்பக்கம் தண்ணீர் தொட்டு அமுத்தி ஒட்ட வேண்டும். அல்லது, மோதகமாக குவித்துச் செய்யலாம். எல்லா மாவையும் இதே போல கொழுக்கட்டையாக செய்ய வேண்டும்.
கொழுக்கட்டை மாவையே சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொண்டு, ஒரு கிண்ணத்திலை ஒரு டம்பளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு, இந்த உருண்டைக ளைப் போட வேண்டும். உருண்டை வெந்து மேலே மிதக்கும். அப்போது, வெல்லம் கொஞ்சம் போடவும். கெட்டியாக ஆகும். கீழே இறக்கி, ஏலப்பொடி தூவி, பால் ஊற்றி இறக்கி விடவும். இது பால் கொழுக்கட்டை.
உப்பு கொழுக்கட்டை பூரணத்தை, வடை தட்ட வேண்டும்.

Monday, March 5, 2012
மாங்காய் பச்சடி
மாங்காய் அல்லது மாம்பழம் - 1
வேப்பம்பூ சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
புளி சிறிதளவு.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு தாளித்து, வேப்பம் பூ, பச்சை மிளகாய், மாங்காய் ஒன்றையும் வதக்க வேண்டும். நீர்ப்புளியாக கரைத்து அதில் விடவும். உப்பு, மஞ்சள் பொடி போட்டு, கொதிக்கும் போது, மாங்காய் வெந்திருக்கும். சிறிதளவு வெல்லத்தைப் பொடி செய்து அதில் போடவும். பெருங்காயம் கொஞ்சம் போடவும்.கொதித்து கெட்டியானதும், இறக்கவும். இதில் புளிப்பு, இனிப்பு, கசப்பு மூன்று சுவைகளும் கலந்திருக்கும்.

Subscribe to:
Posts (Atom)