ஆடி மாதம் என்றாலே பண்டிகைகள் வரிசையாக வந்து விடும். ஆடி ஒன்றாம் தேதி, ஆடிப்பண்டிகை. அன்று வாசலில் அன்று வாசலில் மாக்கோலம் போட்டுச் செம்மண் இட வேண்டும். அன்று சமையலில், இனிப்புப் போளி செய்வார்கள்.(முடியாவிட்டால் ஏதாவது பாயசம் செய்யலாம்).
வடை, பாயசம் எல்லாம் செய்து சாப்பிடுவார்கள். அன்று மாலை, இளம் தேங்காயை வாங்கி வந்து, மேலே உள்ள .தேங்காய் நாரை எடுத்துவிட்டு, வழுவழுப்பாகச் செய்து, ஒரு கண்ணைப் பொத்து, அதில் உள்ள இளநீரை எடுத்து வைத்து, தேங்காய்க்குள், வறுத்த அவல், பாசிப்பருப்பு, வெல்லம், எள் எல்லாவற்றையும் பொடி செய்து அதில் நிறைய திணித்து எடுத்து வைத்த இளநீரை அதில் ஊற்றி, வாதநாவல் குச்சியை சீவி, அதை அடைப்பார்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் தடவி, இளம் தணலில், ஓலையை வைத்துச் சுடுவார்கள். அப்படிச் சுடும்போது, உள்ளே இருக்கும், பூரணம் வெந்து தேங்காய் ஒரு வெடிக்கும், அதை அப்படியே எடுத்து சுவாமி முன்வைத்துப் படைப்பார்கள். திருஷ்டி கழித்து என்பார்கள். அதை மெதுவாக எடுத்து ஓட்டைப் பிரித்து, உள்ளே இருக்கும். பூரணத்தைத் தேங்காயோடு கட்பண்ணி எல்லாருக்கும் கொடுத்துச் சாப்பிடுவார்கள். தேங்காய் சூடும் பண்டிகை, என்பார்கள் இன்றும் கிராமங்களில் இதை விடாமல் செய்து வருகிறார்கள்.
ஆடிமாதம் வரும் 4 வெள்ளிக்கிழமைகளில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை வீட்டில் நாமகிரி அம்மனுக்கு மாவிளக்குப் போட்டு, புற்றுக்கும் சென்று மாவிளக்குப் போட்டு, மாரியம்மனுக்கும் மாவடியனுக்கும் பால் வாங்கிக் கொடுத்து விட்டு வருவது வழக்கமாக உள்ளது. வெளியூரில் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமை அன்று அம்ம னை நினைத்து வீட்டில் மாவிளக்குப் போடலாம்.
எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Wednesday, June 15, 2011
மாரியம்மன் பண்டிகை
வைகாசி மாதம், கரூரில் மாரியம்மன் பண்டிகை மிகவும் பிரசித்தம். அம்மனுக்கு முதல் காப்பு கட்டியதிலிருந்தே, கம்பத்திற்குத் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்து விடுவார்கள். மாரியம்மனுக்கு ஒரு வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் நடைபெறும்.
அன்று கோயிலுக்குச் சென்று பால் வாங்கிக் கொண்டு போய் கொடுத்துவிட்டு மணமுள்ள பூக்க ளை வாங்கிக் கொண்டு போய்க் கொடுத்து நமஸ்காரம் செய்து விட்டு வரவேண்டும்.
இரண்டாம் காப்பு கட்டியபிறகு, திருவிழா (அக்னி சட்டி, அலகு குத்தி எடுப்பார்கள்) மூன்று நாட்கள் பால்குடம் நடக்கும். பண்டிகை நாட்களில் ஒரு வெள்ளிக்கிழமை மாரியம்மனுக்கு வீட்டில் மாவிளக்குப் போட வேண்டும். ஒரு சொம்பில் நிறைய நீர் ஊற்றி, அதில் மஞ்சள் பொடி, விபூதி, குங்குமம் போட்டு, வேப்பந்தழை நிறைய வைத்து ஒரு குழவிக்கல்லை அதில் செருகி அதற்கு கண்மலர் வைத்து விபூதி இட்டு மஞ்சள் பூசி, சந்தனம் குங்குமம் இட்டு, மாலைகள் போட்டு, ஒரு இரவிக்கைத் துணியை சொம்பிற்குப் பாவாடையாகக் கட்டி, அம்மனுக்கு, நகைகள் போட்டு, அலங்காரம் செய்ய வேண்டும்.
அன்று விரதம் இருந்து, சமைத்து, பாயசம் வைத்து, சுவாமிக்கு (சாதம், பருப்பு, பாயசம் ) மாவிளக்கு போட்டு இரண்டு தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம, நீர்மோர், பானகம் வைத்து, மாரியம்மனை வேண்டிக் கொண்டு பூஜை செய்ய வேண்டும். தீபாராதனை செய்து, தேங்காய் பழம் உடைத்து, ஆரத்தி எடுத்து, முடிவு செய்ய வேண்டும். அடுத்த நாள் காலை குளித்து விட்டு, சுவாமிக்கு கற்பூரம் காட்டி, எடுத்து வைத்துவிட்டு, அந்தச் சொம்பில் உள்ள நீரை மாரியம்மன் கோயிலில் உள்ள கம்பத்தடியான் மீது ஊற்ற வேண்டும். இந்த 15 நாள் பண்டிகையில், நம்மால் முடிந்த அளவுக்கு - மூன்று நாளோ, ஒரு நாளோ - கோவிலுக்குச் சென்று மாரியம்மன், கம்பத்தடியானுக்கு, தண்ணீர் ஊற்றி வேண்டிக் கொண்டு வர வேண்டும்.

Thursday, April 14, 2011
புது வருடப் பிறப்பு - விஷு
சித்திரை ஒன்றாம் தேதி, விஷு (புது வருடப் பிறப்பு) கனி காணுதல் என்னும் பண்டிகை யாகும். முதல்நாளே வீட்டச் சுத்தம் செய்து, கோலம் போட்டு, செம்மண் இட வேண்டும். சுவாமி அறையைத் துடைத்து விட்டு கோலம் போட்டு, எல்லா படஙகளையும் துடைத்து, சந்தனம், குங்குமம் இட்டு, முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு கோலம் போட்ட பலகையின் மீது வைத்து, சந்தனம், குங்குமம் இட வேண்டும்.
கண்ணாடிக்கு முன்னால், சின்னச் சின்னக் கிண்ணங்களில் அரிசி, பருப்பு, உப்பு, மஞ்சள் பொடி, குங்குமம் வைக்க வேண்டும். கண்ணாடிக்கு நகைகளைப் போட்டு அலங்காரம் செய்ய வேண்டும். ஒருபெட்டியில் எல்லா நகைகளையும் வைத்து வெத்த லை பாக்கு, எல்லாவித பழங்கள் முக்கியமாக (மா, பலா, வாழை), தேங்காய், புதுத் துணி எல்லாவற்றையும் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும்.
மறுநாள் விடியற்காலையில் எல்லாரும் எழுந்திருப்பது முன்னால் எழுந்து பல் தேய்த்து முகம் கழுவி, பொட்டு இட்டுக் கொண்டு, ஆண்டவனை, இந்த வருடம் முழுவதும் நல்ல வருடமாக எல்லாருக்கும் அமைய வேண்டும். எல்லாரும் சுகமாக நன்றாக இருக்க வேண்டும், என்று மனதில் பிரார்த்தித்துக் கொண்டு விளக்கேற்றி எல்லா மங்கலப் பொருட்களையும் தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டு, பிறகு, வீட்டில் உள்ளவர்களை எழுப்பி கண்ணை மூடிக் கொண்டு வந்து சுவாமி அறையின் முன் வந்து, சுவாமியைப் பார்க்க சொல்ல வேண்டும். பிறகு, கண்ணாடியில் அதற்குமுன் உள்ள மங்கலப் பொருட்களைப் பார்த்து, கண்ணில் தொட்டு ஒற்றிக் கொண்டு நமஸ்காரம் செய்ய சொல்ல வேண்டும்.
பிறகு எப்போதும் போல் அன்றாட வேலைகளைச் செய்து கொள்ளலாம். அன்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும். பெரியவர்களுக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
பக்கத்தில் உள்ள கோயில்களுக்குச் சென்று வரலாம். அன்று சமையலில் வேப்பம்பூ கட்டாயம் சேர்க்க வேண்டும். பாயசம், மாம்பழம், வேப்பம்பூ போட்டு புளிப்பச்சடி அவசியம்.

Tuesday, April 5, 2011
ஸ்ரீ ராம நவமி
பெரும்பாலும் பங்குனி மாதக் கடைசியில் வரும். சில சமயங்களில் சித்திரை முதல் வாரம் கொண்டாடுவார்கள். ஸ்ரீ ராம நவமி, பங்குனி மாதம், புனர்பூசம் நட்சத்திரத்தில் வருகிறது. அன்று ராமர் புண்ணிய பாரதத்தில் உதித்த நன்னாளாகும்.
அன்று வாசலில் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். குளித்து விட்டு விளக்கேற்றி இராமர் பட்டாபிஷேகப் படத்தை, ஒரு கோலம் போட்ட பலகையின் மீது வைத்து ராமருக்குச் சந்தன குங்குமம் இட்டு, பூமாலைகள் போட்டு, பஞ்சு வஸ்த்ரம் சாத்தி, ராம நாமாவளிகளைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். (கிரமமாக செய்ய வேண்டுமென்றால், ராமர் அஷ்டோத்திரம் படித்து பூஜை செய்யலாம்)
ராமருக்குப் பிடித்தமான பாயசம், கோசம்பரி, நீர்மோர், பானகம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். பத்து நாளும், ராமர் படத்தை வைத்து பூஜை செய்து, தினமும் ராமர் பற்றிய பாட்டுகளை ஸ்லோகங்களைச் சொல்லி இரண்டு வேளையும் ஆரத்தி எடுத்து பத்து நாள் முடிக்க வேண்டும். அக்கம் பக்கம் உள்ளவர்களை, தெரிந்தவர்களைக் கூப்பிட்டுத் தாம்பூலம் கொடுத்து, நீர்மோர், பானகம், சுண்டல், கோசம்பரி வினியோகம் செய்ய வேண்டும்.

Friday, February 25, 2011
காரடையான் நோன்பு
மாசி மாத கடைசி தேதியும் பங்குனி ஒன்றாம் தேதியும் சேர்ந்து வரும் நாளில் காரடையான் நோன்பு வரும். மாசி மாதம் இருக்கும் போதே பூஜை செய்து சரடு கட்டிக் கொள்ள வேண்டும். பங்குனி மாதம் எப்போது வேண்டுமானாலும் மாதம் பிறக்கும் ராத்திரி, பகல், எந்த நேரமானாலும் அப்போது தான் காரடையான் நோன்பு செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்ன ரே குளித்துவிட்டு நைவேத்தியத்தைச் செய்ய வேண்டும்.
நான்கு மணி நேரத்துக்கு முன்னர், கடலைப் பருப்பு, தட்டைப்பயறு தனித்தனியாக ஊற வைத்து, குளித்துவிட்டு வந்து வேகவிடவும். உப்புக் கொழுக்கட்டைக்கு கடலைப்பருப்பு, இனிப்புக் கொழுக்கட்டைக்கு தட்டைப் பயறு போட வேண்டும். ஏற்கனவே கொழுக்கட்டை செய்யும் முறை சொல்லி இருப்பதைப் பார்த்து செய்யவும். வெண்ணை வாங்கி வைத்துக் கொள்ளவும்.
நோன்புச் சரடு ஒரு வாரம் முன்ன ரே வாங்கி வைத்து விடவும். காலையில் குளித்ததும், சரடுக்கு பச்சை மஞ்சள் குறுக்காக ரவுண்டாக நறுக்கி ஊசியால் ஓட்டை போட்டு, சரடை நுழைத்து மத்தியில் கட்ட வேண்டும். அதனுடன், மல்லிகை, மரிக்கொழுந்து, அரளி வைத்துக் கட்டலாம். தேங்காய்ப் பழம் வெத்த லை பாக்கு வைத்து நைவேத்தியம் செய்ய வேண்டும். இரண்டு நுனி இலை போட்டு ஸ்வாமிமுன் மாக்கோலம் போட்டு (வாசலிலும் போட வேண்டும்), இலையை அதன் மேல் போட்டு நைவேத்யமாக உப்பு கொழுக்கட்டை, வெல்லக் கொழுக்கட்டை, வெண்ணெய் வைக்க வேண்டும்.
காமாட்சி அம்மனுக்கு பூசை செய்து,
என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சரடுக்குப் பூசை செய்து, கணவர் கையால் கழுத்தில் கட்டிவிடச் சொல்லவும். அவருக்கு நமஸ்காரம் செய்யவும்.
என்று சொல்ல வேண்டும். தினமுமே இதை நமஸ்காரம் செய்யும் போது இரண்டு வேளையும் சொல்லலாம்
பிறகு சுவாமி முன் போட்ட இலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு அடை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியைக் கணவரைச் சாப்பிடச் சொல்ல வேண்டும். அன்று ஒரு நாள் மட்டும் மனைவி சாப்பிட்ட பிறகு கணவர் சாப்பிடுவது என்று வழக்கத்தில் உள்ளது.
தினமுமே காலையில் கணவர் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து விட்டு திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தான் எழுந்திருக்க வேண்டும். காலையில் பூஜை முடிந்த பிறகு கணவருக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் செய்ய சொல்ல வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் செய்யலாம்!

ஓரடையும் தட்டி வைத்து
உருகாத வெண்ணை வைத்து
நோன்பு நோற்றேன்
ஒருக்காலும் என்கணவர்
எனைவிட்டுப் பிரியாதிருக்க வேண்டும் தாயே!
என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.
சரடுக்குப் பூசை செய்து, கணவர் கையால் கழுத்தில் கட்டிவிடச் சொல்லவும். அவருக்கு நமஸ்காரம் செய்யவும்.
மங்களே மங்களதாரே
மாங்கல்யே மங்கலப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே சதா!'
என்று சொல்ல வேண்டும். தினமுமே இதை நமஸ்காரம் செய்யும் போது இரண்டு வேளையும் சொல்லலாம்
பிறகு சுவாமி முன் போட்ட இலையில் உட்கார்ந்து, ஒவ்வொரு அடை எடுத்து சாப்பிட்டுவிட்டு மீதியைக் கணவரைச் சாப்பிடச் சொல்ல வேண்டும். அன்று ஒரு நாள் மட்டும் மனைவி சாப்பிட்ட பிறகு கணவர் சாப்பிடுவது என்று வழக்கத்தில் உள்ளது.
தினமுமே காலையில் கணவர் பாதங்களைத் தொட்டு நமஸ்காரம் செய்து விட்டு திருமாங்கல்யத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டு தான் எழுந்திருக்க வேண்டும். காலையில் பூஜை முடிந்த பிறகு கணவருக்கு நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் செய்ய சொல்ல வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்களுக்கும் செய்யலாம்!
Thursday, February 17, 2011
சிவராத்திரி
மாசி மாதம் சிவராத்திரி வரும். சிவனுக்கு அன்று புட்டு, சக்க ரை வள்ளிக் கிழங்கு(உப்பு போட்டு வேக வைத்தது), சுண்டல், வடை, பயத்தங்கஞ்சி எல்லாம் செய்து நைவேத்தியம் செய்வார்கள். அன்று காலையிலிருந்து விரதம் இருப்பவர்கள் ஒன்றும் சாப்பிடாமல் இரவு தான் சாப்பிடுவார்கள். (காலையில் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுக் கொள்ளலாம்).
புட்டு ஏற்கனவே செய்முறையில் உள்ளபடி செய்யவும்.
சக்கரவள்ளிக்கிழங்கில் உப்பு போட்டு வேக வைக்கவும்.
கடலைப்பருப்பு சுண்டல் 1/2 டம்ளர் போட்டு செய்யவும்.
பயறு சூடு பண்ணி கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து வெல்லம் போட்டு ஏலக்காய் போட்டு செய்யவும்.
சிவன் பாடல்கள், ஸ்தோத்திரங்கள் நாமாவளிகள் சொல்லி, அர்ச்ச னை செய்து (வில்வம் மிக விசேசம்) தேங்காய் , பழம், வெத்த லை பாக்கு வைத்து பூசை செய்யவும்.

Subscribe to:
Posts (Atom)