எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Wednesday, December 26, 2012
மாட்டுப் பொங்கல்
பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். முதல் வடித்த சாதத்தில், கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு, மஞ்சள் கலர் சாதம், சிவப்பு சாதம், சக்க ரை பொங்கல், வெண் பொங்கல், தயிர் சாதம், எல்லாம் பிசைந்து, முதல் நாள் இரவு ரெடி செய்து கொண்டு, மறு நாள் காலையில் சூரிய உதயத்தின் போது, சூரிய வெளிச்சம் படும் முற்றத்திலோ, மாடியிலோ, கனுப் பொங்கல் வைக்க வேண்டும்.
கோலம் போட்டு, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, மஞ்சள் இலையை மூன்றாகப் போட்டு,அதில் கலந்து பிசைந்த சாதத்தைக் கிள்ளி வைக்க வைண்டும். பிள்ளையாருக்கு விளக்கேற்றி வைத்து, வெற்றிலை பாக்கு, பழம் நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி, மீதி சாதத்தைக் கரைத்து ஆரத்தி எடுத்து கொட்டிவிட வேண்டும். பிறந்த வீட்டில் சகோதரன் சகோதரிகள் நன்றாக வாழ வேண்டும் என்று பிரார்த்த னை செய்து,
காக்கா பிடி வைத்தேன், கன்றுப் பிடி வைத்தேன், காக்காய்க்கும், கன்றுக்கும் கல்யாணம், குருவிக்கெல்லாம் கொண்டாட்டம்,
காக்கா கூட்டம் கலைந்தாலும்,
எங்கள் கூட்டம் கலையக் கூடாது
என்று சொல்லிக் கொண்டே கனு வைப்பார்கள்.
கனு வைக்கும் முன் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் மஞ்சள் கிழங்கைக் கொடுத்து, நெற்றியில் மூக்கில் தேய்த்துவிடச் சொல்லி, நமஸ்காரம் செய்ய வேண்டும். கனு வைத்து விட்டு, குளித்து விட்டுத் தான் அடுப்பு பற்ற வைப்பார்கள். அன்று கலந்த சாதம் எல்லாம் செய்வார்கள். அன்று உறவினர்கள், தெரிந்தவர்கள் எல்லாரையும் கண்டு நலன் விசாரித்து பொங்கல் வாழ்த்துச் சொல்லுவார்கள். இது காணும் பொங்கல் என்றும் அழைக்கப் படும்.
தை வெள்ளிக் கிழமை விசேசமானது. நான்கு வெள்ளிகளில், ஏதாவது ஒரு வெள்ளி, வீட்டில், நாமகரி அம்மனுக்கு மாவிளக்கு போட்டு பாம்பு புற்று இருந்தால், அதற்கும், மாவிளக்கு போட்டு, பால் ஊற்றி விட்டு வரலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment