எங்கள் மாமியார் அம்முலு என்னும் அலமேலு ஸ்ரீதரன், எங்கள் வசதிக்காக எழுதிக் கொடுத்த பண்டிகை மற்றும் சமையற் குறிப்புகளைச் சேமிக்க வே இந்தப் பகுதி
Wednesday, December 26, 2012
போகிப் பண்டிகை
மார்கழி மாதம் முடியும் போது, போகிப் பண்டிகை வரும். மார்கழி இறுதியிலேயே, வீட்டைச் சுத்தம் செய்து சுண்ணாம்பு அடித்து, செம்மண் பட்டை இட்டு வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்த வேண்டும். அன்று வாசலில், செம்மண் இட்டு, கோலம் போடுவார்கள். மார்கழி முப்பது நாட்களுமே, வாசலில், பெரிய பெரிய கோலங்கள் இட்டு பரங்கிப் பூ கொண்டு வந்து கோலத்தின் நடுவில் சாணியை உருட்டி வைத்து பூவே அதில் செருகி வைப்பார்கள்.
போகிப் பண்டிகைக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து, வடை தட்டி பாயசம் செய்ய வேண்டும். போளி செய்ய வேண்டும். அன்று கரும்பு, மஞ்சள், வாழைப்பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு, எல்லாம் வாங்கி வருவார்கள். கூடைப் பூ வாங்கி வந்து நல்ல நேரம் பார்த்து, வீட்டு வாசல் பின்பக்கம், வாகனங்கள் எல்லாவற்றிற்கும் காப்பு கட்டுவார்கள்.
2 வெண்கலப் பாத்திரத்தைத் தேய்த்து, சுண்ணாம்பு தடவி, சூரியன் சந்திரன் வரைந்து, மஞ்சள் செடியை கழுத்தில் கட்ட வேண்டும். முதல் நாளே, எல்லாவற்றையும் தயார் செய்து கொள்ள வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment