வரலட்சுமி பண்டிகை முடிந்து 4 நாட்களிலே ஆவணி அவிட்டம் பண்டிகை வந்துவிடும். வீட்டில் உள்ள புருஷர்கள் புதுப் பூணூல், மாற்றிக் கொள்வார்கள். அன்று வாசலுக்குச் செம்மண் இட்டு கோலம் போட வேண்டும். காலையில் இட்லி, அப்பம் வார்க்க வேண்டும். அவர்கள் பூணூல் போட்ட பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். வீட்டில் போட்டுக் கொள்வதாய் இருந்தால் மஞ்சள் பிள்ளையார் பிடித்து பூஜை செய்த பிறகு, பூணூல் போட்டுக் கொள்வார்கள். பூஜைக்கு உதிரிப்பூ கொஞ்சம், வெற்றிலைப் பாக்கு, பழம் போதும். மத்தியானம், வடை, பாயசம், ஒரு கறி, ஒரு கூட்டு, உப்பிட்டு, சாம்பார், ரசம் என்று பலவகைகள் செய்ய வேண்டும். obottu can be made one day earlier too.
அடுத்த நாள் காயத்ரி ஜெபத்தன்று கலந்த சாதம் தான் செய்வார்கள். தேங்காய்ச்சாதம், தக்காளி புளியஞ்சாதம், எலுமிச்ச பழ சாதம், தயிர் சாதம், அவியல், தொட்டுக் கொள்ள செய்யலாம். அன்று குழம்பு , ரசம் வைக்க மாட்டார்கள். பிஸிபேளாபாத் கூட செய்யலாம்.
No comments:
Post a Comment